TamilsGuide

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டது

இன்று (01) காலை கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு புகையிரதம் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘புலதிசி’ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் எனும் புகையிரதமே கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் அருகே இவ்வாறு தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் 9வது நடைமேடைக்கு அருகில் ரயில் தடம் புரண்டதாகவும், தண்டவாளத்தில் ரயிலை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment