TamilsGuide

படலந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment

Comment