நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு சென்சார் போர்ட் U/A சான்றிதழ் வழங்கியது. ரெட்ரோ 2 மணி நேரம் 48 நிமிட படமாக அமைந்துள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கேரளாவில் நடைப்பெற்றது. அதில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் " நான் ஒரு பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக சூர்யா சாருக்கு ஒரு லவ் லெட்டராவது கொடுத்திருப்பேன். அவருடைய தோற்றத்திற்கும், அழகுக்கும் மட்டும் நான் அதனை கொடுத்திருக்க மாட்டேன். அவருடைய மனதிற்கும், கண்ணியத்திற்கும், அவர் செய்யும் நல்ல காரியத்திற்கும் கொடுத்திருப்பேன்.
அவரை பற்றி அவ்வளவு அதிகம் உங்களுக்கு தெரிகிறதோ அவ்வளவு உங்களுக்கு பிடிக்கும் மேலும் அவர் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார்" என கூறினார்.


