TamilsGuide

கண்டியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

சிறி தலதா வழிபாட்டு நிகழ்விற்கு இணையாக, கிளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலுடன் கண்டி நகரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு தரிசிக்க வந்தவர்கள், அப்பகுதி நிறுவனத்தினரின் சிரமப் பங்களிப்புடன் நேற்று (27) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு “கிளீன் ஸ்ரீலங்கா” செயலக அதிகாரிகளும், இளைஞர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளைக் கொண்ட பல தன்னார்வக் குழுக்களும் தமது பங்களிப்பை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்று (28) முழு கண்டி நகரம் முழுவதிலும் முன்னெடுக்கப்படவிருக்கும் தூய்மைப்படுத்தல் பணிக்கு கிளீன் ஸ்ரீலங்கா குழுவினர் தயாராக உள்ளனர்.

கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, வெற்றிகரமாக்க பொதுமக்களின் ஆதரவு குறைவின்றிக் கிடைத்தது.

தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையை மையமாகக் கொண்டு, கடந்த சில நாட்களாக “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
 

Leave a comment

Comment