TamilsGuide

உள்ளூராட்சி தேர்தல் - 30 வேட்பாளர்கள் கைது

2025 உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக இதுவரை மொத்தம் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (ஏப்ரல் 28) காலை 6:00 மணி வரை இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்களைத் தவிர, 131 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அதே காலகட்டத்தில் 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான 313 முறைப்பாடுகளும், குற்றச் செயல்கள் தொடர்பான 85 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment