தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி முகமது லஃபர் தாஹிர் மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
களனி பிரதேசத்தில் அரசாங்க காணியொன்றுக்குச் சட்டவிரோதமாகக் காணி உறுதிப்பத்திரம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக்கோரியே பிரசன்ன ரணவீர இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.


