தேர்தலில் லிபரல் கட்சி(Liberal Party of Canada), பழமைவாதக் கட்சி(Conservative Party of Canada), புதிய ஜனநாயகக் கட்சி(New Democratic Party)(NDP), பசுமைக் கட்சி(Green Party of Canada) என்றாக தேசிய அளவில் நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன.
பிரெஞ் மொழி பேசும் தனித்துவமான கியூபெக் மகாணத்தில் மாகாணக் கட்சி புளக் கியூபெக்குவா(Bloc Québécois) கட்சியும் அந்த மகாணத்தில் மட்டும் போட்டி இடுகின்றது.
மொத்தம் 343 ஆசனங்கள் உள்ள பாராளுமன்றத்தில் ஆகக் குறைந்தது 172 ஆசனங்களைப் பெறும் கட்சி ஆட்சியை அறுதிப் பெரும்பான்மை அடிப்படையில் அமைக்கலாம். இதற்கு குறைவான ஆசனங்களைப் பெற்றால் சிறுபான்மை அரசுதான் அமையும்.
மிகப் பெரிய மாகாணங்களான ஒன்ராறியோ கியூபெக் இரண்டும் ஆட்சி அமைப்பதை அதிகம் தீர்மானிக்கும் மாகாணங்களா இருக்கின்றன.
கடந்த இரண்டு தவணையும் கனடாவை ஆண்டு வந்த லிபரல் கட்சிக்கும் , பழமைவாத கட்சிக்கும் இடையிலேயே ஆட்சியைப் பிடிப்பதற்குரிய பிரதான போட்டி வழமை போல் நிலவுகின்றது.
ஆனாலும் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் லிபரல் கட்சி ஆட்சியமைப்பதான வாய்ப்பும் வழமை போல் வாய்பும் சிறிய அளவில் உண்டு.
நடப்பு அரசு அவ்வாறுதான் அமைந்தும் இருந்தது.
எல்லாக் கட்சிகளும் முதலாளித்துவக் கட்சிகளாகக இருந்தாலும் தீவிர வலதுசாரிக கருத்தியலை தனக்குள் உள்வாங்கிச் செயற்படும் கட்சியாக பழமைவாத கட்சியும் இதிலிருந்து சற்று வேறுபட்டு வலது இடதுசாரிக் கருத்தியலாக சீர்திருத்தக் செயற்பாடுகளை தனக்குள் உள்வாங்கி செயற்படுவது லிபரல் கட்சியின் வழமை.
ஒரு காலத்தில் தன்னை இடதுசாரியாக கட்டமைத்து செயற்பட்ட தற்போதைய புதிய ஜனநாயகக் கட்சி சீர்திருத்தங்களை தனக்குள் தற்போது உள்வாங்கி புதிய பெயருடன் சோசலிசம் என்ற பெயரை அகற்றி கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றது.
பசுமைக் கட்சி உலகெங்கும் செயற்படும் பசுமைக் கட்சிகளுக்கு அண்மையாக சுற்றுச் சூழல் என்பதை பிரதானப்படுத்தி ஆனால் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை அடிப்படையில் செயற்படுகின்றது.
கியூபெக் மாகாணக் கட்சி புளக் கியூபக்குவா கட்சி பிரேஞ்சு மக்கள் அதிகம் செறிந்து வாழும் கியூபெக்கை மையப்படுத்தி அந்த மக்களின் நலன்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக தொடர்ந்தும் செயற்படுகின்றது.
கடந்த இரு லிபரல் ஆட்சிக்காலத்திலும் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு லிபரல் கட்சியிற்கு இருந்தது என்பது அது தனது இரண்டு தவணையையும் முழுமையாக நிறை வேற்றுவதற்கு காரணமாகவும் இருந்தது.
இந்த ஆதரவு பல நல்ல மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை செயற்படுத்துவதற்கான ஆதரவு அழுத்தம் என்பதாக தொடர்ந்தது என்பது இங்கு கவனத்தில் எடுத்தாக வேண்டும்.
கனடாவைப் பொறுத்தவரை சிறுபான்மை அரசாக தொடர்ந்த லிபரல் ஆட்சியென்பது அறுதிப் பெரும்பான்மை என்ற ஆட்சியை விட சிறப்பாக செயற்படுவதற்கு ஏதுவாக அமைந்தும் இருந்தது.
இதில் குறிப்பிடும்படியாக கொரனா காலத்து மக்களுக்கான வாழ்வாதாரத்தை தொடர்ந்தும் தடங்கல் இன்றி இலகுவாக கொடுப்பனவு செய்தல் என்றாகவும் சிறு தொழில் முனைவோருக்கான பகுதியாக மட்டும் திருப்பி செலுத்தும் குறிப்பிட்ட காலம் வரை வட்டி செலுத்தாத கடன் என்றாக மிகவும் நல்ல செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு இது ஏதுவாகவும் இருந்தது.
கூடவே ஏற்கனவே முழுமையான? இலவச மருத்து வசதி என்பது கனடாவில் தொடரும் சூழலில் மேலும் இதற்குள் கண் சிகிச்சை, பல் சிகிச்சை போன்றவை உள்ளடக்காமல் இருந்த சூழலில் அவற்றை இலவச மருத்துவ சேவையிற்குள் உள்ளடக்குவதற்கும் இந்த சிறுபான்மை அரசு முறை அதிகம் காரணமாக இருந்தது.
இதில் லிபரல் அரசின் முன்னாள் பிரதம் ஜஸ்ரின் ரூடோ(Justin Trudeau)வின் சிறந்த செயற்பாட்டுடன் புதிய ஜனநாயகக் கட்சியின் அழுத்தங்களும் இவற்றை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தன.
அதி தீவிர வலதுசாரிக் கட்சியான பழமைவாத கட்சி இந்த மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக மருத்துவம் இலவசம் என்பதை தனியார் மயமாக்குவதற்காக கடந்த பல வருடங்களாக ஆட்சியில் இருந்த காலத்தில் முயற்சித்தும் அது முடியாமல் போனது இங்கு கவனத்தில் எடுத்தாக வேண்டும்.
நடப்பு ஆட்சிக் காலத்தில் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி கற்பதற்கான விசா, உறவினர்கள் நண்பர்களை கனடா வந்து சந்திப்பதற்கு விசிற்றர் விசா என்பனவற்றில் மிக இலகு தன்மையை இதே அரசு தான் அறிமுகப்படுத்தியது.
அது பெரும் தொகையான சர்வதேச மாணவர்களை அதிலும் சிறப்பாக இந்திய மாணவர்களை மாணவ விசாவிலும் கூடவே விசிற்றர் விசாவில் பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து எம்மவர்களும் அதிகம் கனடா கொண்டு வந்து சேர்வதற்கும் வழிவகுத்தது.
அது இவர்களுக்கான குடியிருப்பு பற்றாக் குறை , வேலைப் பற்றாக் குறை என்பதான நிலமையை ஏற்படுத்தியது.
உலகப் பொருளாதாரம் சரிந்து வந்த நிலையில் பெரும் தொற்று, உக்ரேன் ரஸ்யா போர் போன்றவற்றினால் பண வீக்கம் ஏற்பட்டு அதனைச் சரி செய்ய வங்கியின் வட்டி வீதம் அதிகரிப்பு என்பதான செயற்பாடுகள் பாரிய பொருளாதார சுமைகளை மக்களுக்கு ஏற்படுத்தியது.
நீண்ட காலமாக கனடாவில் வசிக்கும் மக்கள் தமது வீட்டுக் கடனை செலுத்த முடியாது எகிற வீட்டு விலை எகிற வட்டி விகிதம் என்பனவற்றால் பெரும் பாதிப்பிற்குள் உள்ளானர்கள்.
மேற்குலக நாடுகளில் வங்கிக் கடனினில் அதிகம் தங்கியிருக்கும் வாழ்க்கை முறை இந்த வட்டி உயர்வினால் அதிக தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது.
கூடவே வீடுகளின் வாடகை அதிகரிப்பு இங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் புதிய வெளிநாட்டு மாணவர்கள் தற்காலிக விசாவில் விசிற்றர் என்று வந்தவர்கள் என்று பலரையும் பாதிப்படையச் செய்தது.
இதனால் ஏற்பட்ட அதிருப்தி நடப்பு அரசான லிபரல் அரசிற்கான ஆதரவுத் தளத்தில் பாரிய வீழ்ச்சியும் ஏற்படுத்தியது.
இந்த பொருளாதாரச் சிக்கல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் லிபரல் அரசு அதுவும் ஜஸ்ரின் ரூடோ எனபதாகவும் பிரச்சாரப்படுத்தப்பட்டு அதுதான் உண்மை…? என்றாக பார்க்கப்பட்ட நிலை ஏற்பட்டது.
அது பிரதமர் ஜஸ்ரின் ரூடோ பதவியை இராஜினாமா செய்யும் அளவிற்கு கொண்டு வந்து அவரை இராஜினாமா செய்யவும் வைத்தது.
கூடவே எரிபொருள் மீது காபன் வரி என்பதாக சுற்றுச் சூழல் மாசுபடுவதை குறைத்தல் என்பதாக எரிபொருளில் விதித்த மேலதி வரியும் அவருக்கு எதிரான ஆயுதமாக பழமைவாதக் கட்சியினால் பாவிக்கப்பட்டது.
இதன் மறுபுறமாக பழமைவாதக் கட்சி இந்த சூழ் நிலையை தனக்கு சாதகமாக்கி மக்களிடம் தாம் ஆட்சியிற்கு வந்தால் இவை எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றாக பொருளாதார வீழ்ச்சியை குடியிருப்பு பற்றாக்குறை போதியளவு வீடுகளை அமைத்தல் என்பதாக, வீடுகளின் விலையை கட்டுப்படுத்துதல் என்பதாக மக்களிடன் தமது செல்வாக்கை அதிகரிக்க தொடங்கியது.
அதனால் முன்பு எப்போதையும் விட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக லிபரல் கட்சியை விட 15 சத விகிதத்திற்கு மேலான மக்கள் ஆதரவைப் பெற்று அதனைத் தொடர்ந்தும் தக்க வைத்தும் கொண்டது.
இது ஒரு வகையில் ஏறு முக ஆதரவை பெறும் போக்கில் நகரும் சூழலையும் தனக்குள் கொண்டிருந்தது
ஆனால் இரண்டு மாத்திற்கு முன்பு ஜஸ்ரின் ரூடோவின் பதவி விலகலும் அவரின் கட்சித் தலைவர் துறப்பும் கனடிய கட்சி அமைப்பின்படி புதிய கட்சித் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) அந்த கட்சியினால் உறுப்பினர் மகாநாட்டில் தெரிவு செய்யப்பட்டு அவர் பிரதமரரனார்.
இவர் ஒரு பொருளாதார நிபுணர்.
பிரமராக பதவி ஏற்ற சில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கும் ஆணையும் இட்டார்.
இந்நேரம்தான் அமெரிக்காவலில் ட்றம்(Donald Trump) இன் ஆட்சிப் பீடம் ஏற்பும் நடைபெற்றது.
உலகெங்கும் சிறப்பாக கனடாவிற்கும் எதிரான புதிய வரி விதிப்பு கனடா அமெரிக்காவின் அடுத்த மாநிலம் என்றான பேச்சு அமெரிக்க தரப்பில் எழுந்தது
இதனை கனடிய மக்கள் இரசிக்கவில்லை.
உண்மையில் ட்றம் இன் குடியரசுக் கட்சியும் கனடாவின் பழமைவாதக் கட்சியும் தீவிர வரதுசாரிக் கட்சிகள் ஒருமித்து பயணப்படும் தன்மை உடைய கைகுலுக்கும் கட்சி அமைப்பை உடையவர்கள்.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த புதிய வரிப் போரையும் நாடுகளை பிடிப்பேன் என்று வெறுப்புப் பேச்சையும் பதிதாக தலமை எற்ற லபரல் கட்சியின் தலைவரும் தற்போதைய கடிய அரசின் பிரதமரும் மிகவும் திறம்பட கையாளமுற்பட்டார்.
இதனால் மக்கள் அமெரிக்க அரசை திறப்பட எதிர் கொள்ளக் கூடிய லபரல் கட்சியன் புதிய தலைவரை நோக்க அவர் சாரந்த கட்சியை பாரிய அளவில் திடீரென ஆதரிக்க தொடங்கினர்.
கூடவே ஏரிபொருள் மீதான மேலதிக வரியையும் இடை நிறுத்தினார்.
அது வரை இதனை வைத்து அரசியல் செய்த பழமைவாதக் கட்சியிற்கு தனது அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்ட செல்வதற்கான வழிகள் இன்றிய திணறலை ஏற்படுத்தியது.
ஒரு சில வாரங்களில் வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு லிபரல் கட்சி 15 சதவிதம் அளவிற்கு பின்தள்ளி இருந்த மக்கள் அதரவு 25 சதவிதிற்கு மேலாக எகிறி பழமைவாதக் கட்சியை விட மக்களிடம் அதிக ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்தும் கடந்த ஒரு மாதமாக பேணி வருகின்றது.
இந்நிலையில் தான் இன்று தேர்தலை கனடிய மக்கள் சந்திக்கப் போகின்றனர்.
உறுதியான தலைமை அமெரிக்காவின் தற்போதை வரிப் போர் வளங்களை கைப்பற்றுதல் நிலங்கள் மீதான ஆதிகத்தை செலுத்துதல் கைப்பற்றுதல் என்பதான விடயங்களை திறமையாக சாதுர்சியமாக உறுதியாக கைக்கொள்ளக் கூடியவர் மார்க் கார்னி என்ற புதிய லிபரல் கட்சியின் தலைவரும் தற்போதைய காபந்து அரசின் பிரதமர் என்ற முடிவிற்கும் பெரும்பான்மை மக்கள் வந்தும் விட்டனர்.
உலக அளவில் பொருளாதார நிபுணராக வேலை செய்த அனுபவம் உள்ள தற்போதை லிபரல் கட்சியின் தலமைதான் அடுத்த கனடியப் தலைமையாக இருக்க வேண்டும் என்பது நாளை நடைபெறும் தேர்தல் முடியவாக அமையக் கூடும் என்றே அரசியல ஆய்வுகள் கூறி நிற்கின்றன.
சில வேளைகளில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத இடத்து கடந்த பாராளுமன்றம் போல் புதிய ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை புதிய அரசு அமைப்பதற்கு வழங்கும்.
அப்படி அமையுமாயின் அது இன்னும் மக்களுக்கான நலத் திடங்களை அதிகம் எதிர்வரும் காலங்களில் உருவாவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
கனடியத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரிநிதித்துவம் வழமை போல் வெற்றி பெறும் அந்த உறுப்பினர்களின் (சுய)நலன் சார்ந்ததாக அதிகம் இருப்பதினால் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதாக உணர்கின்றேன்.
ஆனால் இந்த தேர்தல் வெற்றிகளுக்கு தமிழர் மத்தியில்(மட்டும்) அதே ‘தேசியம்’ இம் முறையும் பேசு பொருளாக அமையும்.
இரண்டு பிரதான கட்சிகளும் உக்ரேன் ரஸ்யா போரிலும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான கொள்கைகளை கொண்டிருப்பதினால் இந்த விடயம் அதிகம் இத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயமாக இருக்கப் போவது இல்லை.
ஆனாலும் கனடாவின் இந்த போர்கள் சம்மந்தமான நிலைப்பாட்டில் சமானத்தை முதன்மைபடுத்துவதற்கு பதிலாக போரைத் தொடர்வதற்குரிய நிதி ஆயுத வளங்களை வழங்குதல் என்பது சமான்ய பொது மக்களின் நிலைப்பாட்டிற்கு அதிகம் எதிராகவும் இருக்கின்றது.
அமையும் புதிய அரசு கனடாவின் சுய சார்புப் பொருளாதாரத்தை அதிலும் அதிகம் அமெரிக்காவில் தங்கியிராத பொருளாதாரக் கட்டுமானத்திலும் உலகில் போரற்ற சமாதானம் நிலவுவதற்கான தனது அணிசாராக் கொள்கைகளை தூக்கிபிடித்தால் அமெரிக்க 'ட்றம்’ இன் மேலாதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய செயற்பாட்டை முடிவிற்கு கொண்ட வருவதற்கான ஒரு செங்கல்லை எடுத்து வைப்பதாக நாம் நம்பலாம்.


