கனடாவின் வான்கூவரில் ஒரு விருந்தில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கனடாவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திருவிழாவிற்குள் ஒரு கார் நுழைந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
கூட்டத்திற்குள் காரை ஓட்டிச் சென்ற 30 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த விபத்து பயங்கரவாதச் செயல் அல்ல என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு குழுவினர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து 26 ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் நிகழ்ந்துள்ளன.


