தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர் தற்பொழுது சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய பஹல்காம் தாக்குதலை குறித்து விஜய் ஆண்டனி அவரது கருத்தை பதிவிட்டு ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் "காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்.
வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்." என தெரிவித்துள்ளார்.


