TamilsGuide

கனடா பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த சில தகவல்கள்

திங்கட்கிழமை, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சில தகவல்களைக் காணலாம்.

கனடாவைப் பொருத்தவரை, மக்கள் பிரதமரை நேரடியாகத் தெர்ந்தெடுப்பதில்லை. தேர்தலில் எந்தக் கட்சி அதிக இருக்கைகளைக் கைப்பற்றுகிறதோ, அந்தக் கட்சியின் தலைவர் நாட்டின் பிரதமராவார்.

லிபரல் கட்சி

தேர்தலில் போட்டியிடுபவர்களில் லிபரல் கட்சியின் தலைவரும், தற்போதைய கனேடிய பிரதமருமான மார்க் கார்னி (60) ஒருவர். 

mark carney liberal party

Fort Smithஇல் பிறந்த கார்னி, கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் தலைவராக இருந்ததால், அவர் கனடா மக்களுக்கு மட்டுமின்றி பிரித்தானிய மக்களுக்கும் நன்கு பரிச்சயமானவர் ஆவார்.

கன்சர்வேட்டிவ் கட்சி

கனடாவில் திங்கட்கிழமை நடக்கும் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் இரண்டு. ஒன்று மார்க் கார்னி சார்ந்த லிபரல் கட்சி. மற்றொன்று கன்சர்வேட்டிவ் கட்சி.  

pierre poilievre conservative

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவரான Pierre Poilievre (45) என்பவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Pierre, கால்கரியைச் சேர்ந்தவர் ஆவார். தனது 25ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான Pierre, 20 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.

Bloc Québécois கட்சி

Bloc Québécois கட்சியின் தலைவர் Yves-François Blanchet. 

இக்கட்சி, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களைக் கொண்டுள்ளது.

ஆகவே, Blanchet கனடா பிரதமராக வாய்ப்பே இல்லை என்றே கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நியூ டெமாக்ரட்டிக் கட்சி

நியூ டெமாக்ரட்டிக் கட்சியின் தலைவர், ஜக்மீத் சிங் (46). 

ஏப்ரல் மாதத்தில் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், கனேடிய மக்களில் 8.5 சதவிகிதத்தினர் மட்டுமே நியூ டெமாக்ரட்டிக் கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment