நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஒரு பெரும் பணத்தை சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து திருடுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி திரைப்படம் 0.58 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் இதற்கு முன் வெளியான மத கஜ ராஜா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


