TamilsGuide

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இம்மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மாத்திரம்  150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில்  இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் அவர்களைத் தொடர்ந்து பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டின்  இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு  வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 866,596 ஆகும் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment