TamilsGuide

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சமூக செயற்பாட்டாளர்  டேன்  பிரியசாத் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட  சம்பவத்தில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான  சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மிரிஹானை விசேட விசாரணை பிரிவினரால்  கொழும்பு மேலதிக நீதவான்  ஹர்ஷன கெக்குனுவெலவிடம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்

இதன்போது சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பொலிஸார் நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையில் டேன்  பிரியசாத் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட  சம்பவத்தில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான  சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மிரிஹானை விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ தொடர்மாடி  குடியிருப்பில் வைத்து; டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்து. மோட்டார் சைக்கிளில் வருகைதந்த  இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரைசுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

டேன் பிரியசாத் கொலை சம்பவம் தொடர்பாக வெல்லம்பிட்டி பொலிஸார்   மற்றும் மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயின் இந்த கொலைசம்பவம் தனிப்பட்ட காரணங்கள் நிமித்தம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment