அமெரிக்க ஜனாதிபதியின் பரஸ்பர வரி விதிப்பு தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய சவாலாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த சவாலை எதிர்கொள்வதற்கு இலங்கை ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்துவதுடன் முதலீட்டுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வொஷிங்டனில் இடம்பெற்ற உலகவங்கியின் கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். இலங்கை வரிசுமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு என்பதனால் ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்துவதன் ஊடாக அமெரிக்காவின் வரிவிதிப்பு பாதிப்பை எதிர்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
குறிப்பாக தனியார் முதலீட்டினை ஊக்குவிப்பதற்கு தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மாத்திரமன்றி, இந்த தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய ஏனைய நாடுகளும் தங்கள் ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்துதல், பிராந்தியத்திற்குள் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுதல் போன்றவற்றின் மூலம் தாக்கத்தைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


