TamilsGuide

கடந்த 3 நாளில் போப் பிரான்சிசுக்கு அஞ்சலி செலுத்திய இரண்டரை லட்சம் மக்கள்

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21-ம் தேதி காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது. வாடிகனில் திரண்டுள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.

போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகன் சிட்டி சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது என வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment