TamilsGuide

25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களின் திருமணத்திற்கு மொத்த திரையுலகமும் திரண்டு சென்று வாழ்த்தியது. அரசியல் தலைவர்கள் தொடங்கி முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

கோலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி நேற்றுடன் 25 ஆண்டுகளாகிவிட்டது.

இந்த நிலையில், 25-வது ஆண்டு திருமண நாளை அஜித்- ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அஜித்- ஷாலினிக்கு இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டுக் கொள்கிறார்கள். இந்த வீடியோவில் இருவரும் செம க்யூட்டாக இருப்பதால் இணையவாசிகளும் ரசிகர்களும் அஜித்துக்கும் ஷாலினிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

25-வது திருமணநாளை கொண்டாடிய அஜித் குமார், ஷாலினி தம்பதிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதை அஜித் ரசிகர்களும் கொண்டாடினர்.


 

Leave a comment

Comment