TamilsGuide

சர்வதேச வெளியீட்டிற்கு முன் இந்தியாவில் வெளியாகும் Mission - Impossible 8

சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்த ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், மிஷன் இம்பாஸிபிள் 8ம் பாகத்திற்கான புதிய டீசர் மற்றும் டிரெய்லர் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. டிரெய்லர் காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார். இப்பாகமே படத்தின் கடைசி பாகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படம் ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் ஒரு வாரம் முன்பாகவே வரும் மே 17 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் வெளியான பிறகே திரைப்படம் அதன் சர்வதேச வெளியீட்டை செய்யவுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்துடன் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

முந்தைய பாகத்தில் ஒரு கீயை தேடி அவர் பயணம் செய்வார். இந்த பாகமும் அதை தேடியே கதைக்களம் அமைந்துள்ளது.
 

Leave a comment

Comment