TamilsGuide

டான் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம்- சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முக்கிய சந்தேக நபரை வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது

இதேவேளை டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்

கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இரவு 9.10 மணியளவில்நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்து கொல்லப்பட்டிருந்தார்

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்
 

Leave a comment

Comment