TamilsGuide

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யங்கள்.. கேங்கர்ஸ் ஸ்பாட்லைட் வீடியோ

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த விஷயங்களின் நிகழ்வுகளின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அவை ரசிக்கும்படியாக உள்ளதால் ரசிகர்களில் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
 

Leave a comment

Comment