நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைப்பெறுகிறது.
இந்நிலையில் படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். இதற்கு முன் ரஜினிகாந்த் மற்றும் ஃபகத் ஃபாசில் இருவரும் இணைந்து கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.
இவர்கள் இருவரும் இடையே உள்ள காட்சிகள் மக்களால் கொண்டாடப்பட்டது.
ஜெயிலர் 2 திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என தெரியவில்லை. இந்த காம்போ மீண்டும் ஒன்றாக சேர்ந்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் இசையை அனிருத் மேற்கொள்கிறார் மற்றும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


