TamilsGuide

ஃபீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment