தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது ” தீர்வை வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும், அதன்முதலாவது கூட்டு அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டி அதிகளவான ஏற்றுமதி வருமானத்தினை பெறுவதற்கு தாம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி தாம் செல்வந்தர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டோம் எனவும், அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


