TamilsGuide

உள்ளூராட்சி தேர்தல் - 429 முறைப்பாடுகள் பதிவு

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர்.

இந்த முறைப்பாடுகளில் 61 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 222 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில், 25 வேட்பாளர்களும் 98 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில், 23 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தேர்தல் தொடர்பான மொத்தம் 31 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

இவற்றுள் 03 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 20 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை.

இந்தக் காலகட்டத்தில் பொலிஸார் 02 வேட்பாளர்களையும் 06 ஆதரவாளர்களையும் கைது செய்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் 2025 மே 06 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதற்கான தபால்மூல வாக்குப் பதிவு நடவடிக்கைள் இன்று காலை ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment