TamilsGuide

தலைக்கவசம் பயன்படுத்துவோர் தொடர்பான புதிய உத்தரவு

மோட்டார் சைக்கிள் இல்லாமல் தலைக்கவசம் அணிந்திருந்தாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டாலோ யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை சோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரையும் அவரது உடைமைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிபவர்களால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பொலிஸ் தலைமையகத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உட்பட பல குற்றச் செயல்கள் தலைக்கவசம் அணிந்தவர்களால் செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமே தலைக்கவசம் அணிய வேண்டும் என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 

Leave a comment

Comment