ஜம்மு காஷ்மீரில் அழாகான பகுதிகளில் ஒன்று பஹல்காம். இயற்கை அழகு மற்றும் அமைதிக்காக அந்த பகுதி அறியப்படுகிறது. ஆனால், ஏப்ரல் 21ம் தேதி அன்று பயங்கரவாதிகள் இந்த அமைதியை பறித்து, 26 பேரை கொன்று குவித்துள்ளனர்.
ஆயுத்தம் ஏற்றிய பயங்கரவாதிகள், 'மினி சுவிஸ்ர்லாந்து' என அழைக்கப்படும் பேசாரன் புல்வெளியில் புல்வெளியில் புகுந்தனர். அங்கு பிக்னிக் வந்து சுற்றி திரிந்த பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், ஜான்வி கபூர், சஞ்சய் தத் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல் ஹாசன் "பஹல்காம் தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், "அப்பாவி உயிர்களை பறிப்பதை, எந்த ஒரு காரணத்தினாலும் நியாயப்படுத்த முடியாது" என பதிவு செய்துள்ளார்.


