TamilsGuide

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த தினத்தில் அவரது இலங்கை விஜயத்தை மறக்கமுடியாது

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த தினத்தில் அவரது இலங்கை விஜயத்தை மறக்கமுடியாது.(தினபதி- சிந்தாமணி- ராதா-தந்தி- சன் பத்திரிகை நிறுவனத்தின்- இன்டிப்பெண்டனஸ்)அழைப்பில் இலங்கை வந்தார்.1965 ஒக்டோபர் 21 காலை 10 மணியளவில் இரத்மலானை விமான நிலையத்தில் நடிகை சரோஜாதேவியுடன் நடந்து வரும் காட்சி.அப்போது சென்னையில் இருந்து இரத்மலானைக்கு விமான சேவைகள் இடம்பெற்றன

இரத்மலானை விமான நிலையத்தையும் அதனைச்சூழவும் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டம்.அன்று காலையில் இருந்தே இரத்மலானை விமான நிலையத்தில் இவருக்காக மக்கள் காத்திருந்தனர்.இவரைக்காண்பதற்கும்,வரவேற்கவும் திரண்டு வந்திருந்த மக்களைப்போன்று எந்த ஒரு வெளிநாட்டு தலைவருக்கோ அல்லது ஒரு பிரமுகருக்கோ மக்கள் திரண்டு வந்ததில்லை.அன்று இரத்மலானை விமான நிலையப்பகுதி விமானப்படை பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் இல்லை.இரத்மலானை பிரதேசத்தில் பல தமிழர்கள் வாழ்ந்த காலம்.ஹென்ட்லி சேர்ட்,பாட்டா போன்று இங்குள்ள நிறுவனங்களில் பல தமிழர்கள் பணியாற்றினர்.1983 ஆடி கலவரத்தில் இங்குள்ள பல தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன.இரத்மலானை இந்துக்கல்லூரி மாணவர்கள்,உட்பட பலர் அன்று எம்.ஜி.ஆரை நேரில் காண வந்தனர்.

இரத்மலானையில் இருந்து காலி வீதியின் இரு புறமும் காண வந்த கூட்டம்.அப்போது கை போன் சமூக வலைத்தளங்கள் நவீன ஊடகங்கள் இல்லை.கொழும்பில் எம்.ஜி.ஆர் இங்கு வருவார்,அங்கு வருவார் என்ற வதந்திகள்.அதனால் அவரது வருகைக்காக பல இடங்களுக்கும் அலைந்து திரிந்த ரசிகர்கள்.தமிழ் முஸ்லிம் ரசிகர்கள் மட்டுமல்ல சிங்கள ரசிகர்களும் அவருக்கு இருந்தனர்.1952 இல் இரண்டாவது எலிசபெத் மகாராணியை காண்பதற்கு வந்த மக்களுக்கு பின்னர்,எம்.ஜி.ஆருக்கே இந்தளவுக்கு மக்கள் வந்தனர் என பத்திரிகைகள் தெரிவித்தன.அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி இல்லை.எம்.ஜி.ஆர். தி.மு.க.உறுப்பினர்.

இலங்கையில் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,மலையகம் பகுதிகளுக்கும் சென்றபோதும் திரண்டிருந்த மக்கள் .அப்போது தீபாவளி திருவிழா காலம்.இவர் நடித்த வெற்றிப்படம் "எங்க வீட்டு பிள்ளை" இலங்கையில் கிங்ஸ்லி(கொழும்பு) பிளாசா( வெள்ளவத்தை) நவா (கொம்பனித்தெரு), வெலிங்டன் (யாழ்.நகர்) ராஜா ( யாழ்.நகர்), விஜயா( மட்டக்களப்பு), ஶ்ரீ கிருஷணா ( திருகோணமல), விஜிதா (ஹட்டன்),மொடேர்ன் (பதுளை) மொடேர்ன் (பண்டாரவளை),திவொளி( நுவரெலியா) போன்ற சினிமாஸ் கம்பனி திரை அரங்குகளில் திரையிடப்பட்டது.

இப்படம் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு 1965 தைப்பொங்கல் திருநாளில் தமிழகத்தில் வெளியிடப்பட்டது.

Ruban Mariarajan

Leave a comment

Comment