TamilsGuide

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதியை கைது செய்த பொலிஸார், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment