TamilsGuide

யேமனில் அமெரிக்கா மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் 12 பேர் பலி

அமெரிக்கா மேற்கொண்ட யெமன் தலைநகர் சனாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில்  12 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர் என யெமன் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில், சனாவின் ஷூப் மாவட்டத்தில் உள்ள ஃபர்வா சுற்றுப்புற சந்தையில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது.

இத்தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

Leave a comment

Comment