TamilsGuide

இந்திய ஜெர்சியில் உங்களை காண காத்திருக்கிறேன் - சாய் சுதர்சனை பாராட்டிய சிவகார்த்திகேயன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.

நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பார்ட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீங்க விளையாடுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சாய் சுதர்சன். இந்திய ஜெர்சியில் உங்களின் அபார திறமையை காண காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment