TamilsGuide

போப் பிரான்சிஸ் காலமானார்

உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது.

88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்ச்சியாக இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment