கனடா சுப்பர் 60 என்ற டி10 கிரிக்கெட் லீக்கிற்காக 1,300 இற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணாப்பங்கள் பதிவு செய்துள்ளனர்.
வெளியிடப்பட்ட விபரங்களுக்கு அமைய 34 நாடுகளைச் சேர்ந்த 1,135 ஆண்களும் 235 பெண்களும் பதிவினை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் கனடா சுப்பர் 60 என்ற டி10 கிரிக்கெட் லீக் தொடர் ஆரம்பமாகும் எனவும், திகதிகள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


