TamilsGuide

கனடாவில் ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற இந்தியர்களின் பிரமாண்ட நிகழ்வு

கனடாவில் நடைபெற்ற இந்தியர்களின் பிரமாண்ட நிகழ்வு ஒன்றில் சுமார் ஐந்தரை லட்சம் பேர் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படகின்றது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் 2025 ஆம் ஆண்டு வைசாகி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கல்சா நாள் ஊர்வலத்தில் இவ்வாறு 5,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய சீக்கிய சமூகத்தினரின் வைசாகி விழாவாக இது மீண்டும் மாறியுள்ளது.

சர்ரே நகரின் 128-வது வீதியில் அமைந்த குருத்வாரா டாஷ்மேஷ் தர்பார் கோவிலில் இருந்து ஆரம்பித்த ஊர்வலத்தில், இருபதிற்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பங்கேற்றன.

"இன்றைய நிகழ்வில் நாம் கண்டது, ஒற்றுமை, பல்வகை தன்மை மற்றும் பொது மகிழ்ச்சி ஆகியவற்றின் அழகான வெளிப்பாடு" என்று ஊர்வல பேச்சாளர் மோனிந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

"சர்ரே நகர் கீர்த்தன் என்பது, சீக்கிய சமுகத்தின் வரலாறு, பழக்கவழக்கங்கள், மனித உரிமைகளுக்கான உறுதி மற்றும் அரசியல் சுயாதீனத்திற்கான நம்பிக்கையை பகிரும் வாய்ப்பாகும்.

இது, சர்ரி மற்றும் கனடாவில் வாழும் அனைத்து மக்களுடனும் உறவுகளை இணைக்கும் நிகழ்வாகவும் உருவாகி வருகிறது.

இந்த பாரம்பரியம் தொடர்ந்து வளரும் விதமாக காண்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வைசாகி, 1699ஆம் ஆண்டு கல்சாவின் உருவாக்கத்தையும், பஞ்சாபில் விவசாயிகளின் விளைச்சலையும் நினைவுபடுத்தும் வகையில் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. 
 

Leave a comment

Comment