TamilsGuide

பறந்து கொண்டிருந்த போதே வெடித்து சிதறிய விமானம் - 4 பேர் பலி 

அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதில் வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த இரு பெண்களும், இரு ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
 

Leave a comment

Comment