TamilsGuide

மஹாலக்ஷ்மி கோவிலுக்கு சென்ற சூர்யா மற்றும் ஜோதிகா 

நடிகர் சூர்யா அடுத்து ரெட்ரோ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் இந்த படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

அவரது முந்தைய படம் கங்குவா பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதன் பின் அவர் நடித்த ரெட்ரோ படம் அவரது கெரியரை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லுமா என ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று இருக்கின்றனர்.

ஜோதிகா தனது அடுத்த படத்தை தொடங்க இருக்கும் நிலையில் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் என்னும் இடத்தில் இருக்கும் மஹாலக்ஷ்மி கோவிலுக்கு தான் சென்று இருக்கின்றனர்.
 

Leave a comment

Comment