TamilsGuide

நடிகை சமந்தாவின் புதிய காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்

நடிகை சமந்தா இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், தற்போது அவருடன் ஜோடியாக திருப்பதிக்கு சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பாளராகவும் கலக்கி வருகின்றார். இவர் த்ரிலாலா மூவிங் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ள நிலையில், இதில் முதல் படமாக சுபம் என்ற படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

நடிகர் நாக சைதன்யாவுடனான பிரிவிற்கு பின்பு பல பாடுகளைக் கடந்து வந்த சமந்தா தற்போது தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

சமந்தா தயாரிக்கும் சுபம் என்ற படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. இதன் ப்ரொமோஷன் பணியில் பயங்கர பிஸியாக உள்ளார்.

முதல் கணவரின் பிரிவிற்கு பின்பு தற்போது சமந்தா இயக்குனர் ஒருவரைக் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வப்போது புகைப்படமும் வெளியாகி மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

புதிய காதலரா?

சமந்தாவும் ராஜ் நிதிமோருவும் காதலிப்பதாகச் சில காலமாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இருவரும் ஒன்றாக வெளியே செல்லும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் இயக்குநர்களில் ஒருவர் தான் ராஜ் நிதிமோர். 'தி ஃபேமிலி மேன் 2' இல் சமந்தா வில்லியாக நடித்தார்.

இந்த வெப் தொடரின் மூலம் சமந்தாவுக்குப் பான் இந்தியா நாயகியாக அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து, 'ஹனி பன்னி' வெப் தொடரிலும் நடித்தார்.

இந்நிலையில் சமந்தாவும், ராஜும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகுவதையடுத்து ரசிகர்கள் இவர்களின் திருமண குறித்து மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர்.

சமந்தா  மற்றும் ராஜு திருமணம் மே மாதத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
 

Leave a comment

Comment