TamilsGuide

மெஸ்ஸி செயலால் உச்சக்கட்ட Happy ஆன மோகன்லால்

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியானது எம்புரான் 2 திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்தியளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

திரைப்படம் வெளியாகி 30 நாட்களில் உலகளவில் 325 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மோகன்லால் அடுத்து `துடரும்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 25 ஆம் தேதி வெளியாகிறது.

மோகன்லால் மிகப்பெரிய கால்பந்து ரசிகர் என அவருடைய ரசிகர்களுக்கு நன்றாக தெரியும் குறிப்பாக கால்பந்து வீரரான மெஸ்ஸியை அவருக்கு மிகவும் பிடித்த வீரராகும்.

இந்நிலையில் கால்பந்து வீரர் மெஸ்ஸி அவர் கையெழுத்திட்ட ஜெர்ஸியை மோகன்லாலின் நண்பர்கள் மோகன்லாலுக்கு பரிசளித்துள்ளனர்.

இதனை மிகவும் நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் தளத்திMohanlal is extremely happy with Messi's actionMohanlal is extremely happy with Messi's actionல் பதிவிட்டுள்ளார் மோகன்லால். அதில் அவர் " வாழ்க்கையில் சில தருணத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு நிகழ்வு இது. தி லெஜெண்ட் மெஸ்ஸி என்னுடைய பெயரை அவர் கையால் எழுதி கொடுத்துள்ளார். இதனை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். இது என் இரு நண்பர்களான Dr.ராஜீவ் மாங்கோட்டில் மற்றும் ராஜேஷ் பிலிப் இல்லாமல் நடந்திருக்காது அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி." என பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment