'மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் சூரி ஒரு மீனவனாக நடித்துள்ளார். மேலும் இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
நேற்று படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியதாவது " என்னோட மண்டாடி படத்தின் தொடக்கத்திற்கு இவ்வளவு பிரம்மாண்டமாக செய்ததற்கு ரொம்ப நன்றி. நான் எல்லா மேடையிலும் கூறுவதுதான் நான் இந்த அளவுக்கு இருக்கும் காரணம் இயக்குநர் வெற்றி மாறன் மட்டும்தான். அண்ணனுக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்மேல நம்பிக்கை வைத்து விடுதலை படத்தை இயக்கியதற்கு மிகவும் நன்றி. எதுவுமே இல்லாமல் வந்தேன் , என் சக்திக்கு மீறி சினிமாவில் சம்பாதித்துவிட்டேன். இது போதும் எனக்கு. அடுத்து எனக்கு பிடித்த படங்களில் நடித்தால் போதும். சர்வைவ் பன்றதிற்கு இறைவன் பாக்கியத்தோடு என்னை கலைத்தாய் பார்த்துக்கொண்டால் போதும்." என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சூரி இப்படத்தில் முத்துகாளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார் மேலும் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.


