நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, பசில் ஜோசப், ஸ்ரீலீலா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
நடிகர் திரு.சிவகார்த்திகேயன் வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் உள்ள ஷெரியார் என்ற சிங்கத்தையும் மற்றும் யுகா என்ற புலியையும் 3 மாதங்களுக்கு தத்தெடுத்து, அவற்றின் கவனிப்பு மற்றும் பராமரிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.


