TamilsGuide

எனது மரணம் உலகத்திற்கே கேட்கும் - இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (25) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை வடக்கு காசாவில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் ஃபாத்திமா மற்றும் அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.

"நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன்" என ஃபாத்திமா ஒருமுறை இணையத்தில் பதிவிட்டதை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment