TamilsGuide

JAAT திரைப்பட சர்ச்சை - நடிகர் சன்னி தியோல் உள்ளிட்டோர் மீது வழக்கு - படக்குழு மன்னிப்பு

தெலுங்கு இயக்குநர் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ந் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்த இந்தப் படம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.32 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த படத்தில் கிறிஸ்தவ மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தாக சர்ச்சை எழுந்தது.

இப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் சன்னி தியோல், ரன்தீப் ஹூடா மற்றும் வினீத் குமார் சிங் மற்றும் படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி, தயாரிப்பாளர்கள் மீதும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், 'படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்தக் காட்சி தற்போது படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

எந்தவொரு மத உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. யாருடைய மனதெல்லாம் புண்பட்டதோ அவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment