TamilsGuide

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!

18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கத்தை  சுவீகரித்துக் கொண்டார். 1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த ஷவிந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதே​வேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.03 மீ) வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment