கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல் கல்வி கற்க அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்படும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளே இந்நிலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் விசா நிராகரிப்புகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.