நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்று மாலை சென்னையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெறுகிறது.
மேலும், ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார்.
திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர். படத்தின் நேரளவு 2 மணி நேரம் 48 நிமிடம் 30 வினாடியாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை பிரபல மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அல்போன்ஸ் புத்திரன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இருந்தே நண்பர்களாகி அதன் பின் இயக்குனரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் டிரெய்லர் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


