TamilsGuide

புனித தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  கலந்து கொண்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை நேரடியாக வழிபடுவதற்கான சந்தர்ப்பம் இன்று தொடக்கம் எதிர்வரும் 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

,இந்நிலையில் ஸ்ரீ தலதா வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீ தலதா வழிபாடு, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப நாளான இன்று பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளை தொடக்கம் தினசரி பிற்பகல் 12.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையிலும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment