அஹுங்கல்லவில் அமைந்துள்ள ஒரு பாடசாலைக்கு முன்னால் நேற்றிரவு (17) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்து, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் லக்ஷன் மதுஷங்கா என்ற 28 வயது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


