கடந்த12ம் திகதி சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அதன் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவில்
இவ்வருடத்திற்குரிய விருதுகள் 6 வெற்றியாளர்களுக்கு வழங்கப்பெற்றன.
சிறந்த வர்த்தக வெற்றியாளர்கள் விருது பூரணகுமார் துரைசாமி அவர்களுக்கும்--சிறந்த வர்த்தக பெண் வர்த்தக முயற்சியாளர் விருது வினோகா கண்ணன் அவர்களுக்கும்-சிறந்த இளம் வர்த்தக வெற்றியாளர்கள் விருது கஜன் நித்தியானந்தன் அவர்களுக்கும்-சிறந்த சந்தைப்படுத்தல் வர்த்தக வெற்றியாளர் விருது பூரணி சொர்ணபால அவர்களுக்கும்-இவ்வருடத்தின் தலைவர் விருது தேவதாஸ் சண்முகலிங்கம் அவர்களுக்கும்-சிறந்த சமூக சேவையாளர் விருது தம்பையா ஶ்ரீபதி அவர்களுக்கும் வழங்கப்பெற்றன.
மேற்படி விழாவில் உள்ளுர் கலைஞர்கள் பலருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் அன்றை விருது விழா மேடையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் இணைந்து திரட்டிய 1 மில்லியன் கனடிய டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கான காசோலை கனடிய தமிழர் சமூக மையத்திற்கு வழங்கப்பெற்றது குறிப்பிடத்த்ககது.