பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமற் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பாணந்துறை கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், அங்கு நீராடிக்கொண்டிருந்த போது, ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் உயிர்காக்கும் பிரிவினர் இணைந்து மூன்று பேரை மீட்டனர். எனினும் இரு சிறுவர்களை அவர்களால் மீட்க முடியவில்லை. இந்நிலையில் குறித்த இரு சிறுவர்களையும் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


