TamilsGuide

வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் 

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விதித்த சுங்க வரி தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்த வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளது.

எதிர்வரும்வாரத்தில் இந்தப் பிரதிநிதிகள் குழு அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்றுமதி அபிவிருத்தி சபை இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பாரியளவில் சுங்க வரி விதித்துள்ளது.

இந்த வரி விதிப்பு இலங்கையின் ஆடைக் கைத்தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment