TamilsGuide

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

87,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

இந்த ஏல விற்பனை இன்று (16) நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment