ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்
திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகை சிம்ரன் அவரது பிடிஎஸ் காட்சியை வெளியிட்டுள்ளார்.
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது.
அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


